Sunday, October 16, 2016

பொது சிவில் சட்ட விவகாரம்


பொது சிவில் சட்ட விவகாரம்: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய நடவடிக்கைகளுக்கு தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆதரவு!
**********
பொது சிவில் சட்டம் தொடர்பான நிலைப்பாட்டில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மேற்கொள்ளும் அனைத்துவித நடவடிக்கைகளையும் ஆமோதிப்பதாக தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பின்னால் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் நிற்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் இன்று மாலை 4:00 மணிக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக, அதன் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகமது ஹனீபா தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கூட்டமைப்பின் தலைவர்கள்  செய்தியாளர்களிடம் பேசியதாவது;

“பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து அதன் பின்னால் நிற்பது என நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய சட்டக் கமிஷன் தயார் செய்த கேள்விகளை நிராகரிக்க வேண்டும் என்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முடிவினை நாங்கள் ஒருமனதாக ஆமோதிக்கிறோம்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் பொதுவான உரிமையியல் சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது, இந்திய குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமை பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. மதம் என்பது நம்பிக்கைக்கொள்வது மட்டுமல்ல. அதனை செயல்படுத்துவதற்கு தேவையான சுதந்திரத்தையும் இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள நிலையில், அதற்கு முரணான அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைச் சட்டமான 44-வது பிரிவை மட்டும் பிடித்துக்கொண்டு குரல் எழுப்புவது ஏற்புடையதல்ல. வழிகாட்டுதல் நெறிமுறைச் சட்டத்திற்காக அடிப்படை உரிமைச் சட்டத்தை புறந்தள்ளுவது என்பது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல.

பொது சிவில் சட்டம் என்பது அரசியல் சாசனச் சட்டத்தின் 44-வது பிரிவு-14 வழிக் காட்டுதல்களில் ஒன்று மட்டுமே. இதில் ஒன்று சம வேலைக்கு சம கூலி என்பதாகும். ஆனால், இந்தியாவில் அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. மது விலக்கு, இலவச கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு போன்றவை முக்கிய வழிகாட்டிக் கொள்கையாக அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை அமல்படுத்த எந்த மதமும் தடையாக இல்லை. அவ்வாறு இருந்தும் இந்த வழிகாட்டிக் கொள்கைகள் அமல்படுத்தப்படவேயில்லை. ஆனால், இந்த வழிகாட்டிக் கொள்கையில் உள்ள பொது சிவில் சட்டத்தை மட்டும் அரசு குறிப்பாக மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருப்பது என்பது அப்பட்டமான சிறுபான்மை விரோதப்போக்கை வெளிக்காட்டுகிறது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும், அது நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்துவதோடு பிரிவினையை ஏற்படுத்த வழிவகுக்கும். இதைத்தான் பாஜக அரசு விரும்புகிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும், குடிமக்களின் வாழ்வு வளம் பெறவும் எந்தச் சட்டம் தேவையோ அதனைக் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு, வறுமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுமானால் அதனை வரவேற்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முரண்டு பிடிப்பதன் பின்னணி பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்குகிறது.

ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் ஃபெடரல் கொள்கையை ஆதரிப்பவர்கள் நாம். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் இது ஆகுமென்றால் மக்கள் விஷயத்தில் மட்டும் ஏன் ஆகாது? அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை அமைப்பினர் தங்களுக்குரிய  சிவில் சட்டத்தை கடைப்பிடிப்பதால் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கோ, பாதுகாப்பிற்கோ, முன்னேற்றத்திற்கோ எந்த குந்தகமும் விளையப் போவதில்லை. இதர மதத்தினருக்கும் இதனால் எவ்வித தொந்தரவும் எழாது. ஆகவே பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கை முஸ்லிம்களின் அடையாளத்தை அழிப்பதற்கும், இந்துத்துவாவின் சிந்தாந்த அடிப்படையிலான சட்டங்களை திணிப்பதற்கும் உண்டான சதித் திட்டமே.

ஆகவே, இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் தனித்தன்மையை, நம்பிக்கை சார்ந்த உரிமைகளை பாதுகாக்க, அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஆதரவு தெரிப்பதோடு தொடர்ந்து, முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பின்னால் நிற்பது என்றும் முடிவெடிவெடுத்துள்ளோம்.

மேலும், பொது சிவில் சட்டம் தொடர்பாக தேசிய சட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள கேள்விகளை நிராகரிப்பதோடு, பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தவும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தவும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக தீர்மானித்துள்ளோம். அதோடு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கோரிக்கைக்கு வலுசேர்க்கவும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக தீர்மானித்துள்ளோம்.” என்றனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா Ex MLA, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் சேக் முகமது அன்சாரி, தமுமுக மாநில பொது செயலாளர் பி.எஸ்.ஹமீது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், முஸ்லிம் லீக்கின் பாத்திமா முசாபர், இந்திய தேசிய லீக்கின் தேசிய பொது செயலாளர் நிஜாமுதீன் Ex MLA, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் பொது செயலாளர் தர்வேஷ் ரஷாதி, மில்லி கவுன்சிலின் இப்னு சவூத், ஜமாத்தே இஸ்லாமியின் துணைத் தலைவர் சிராஜ், ஆல் இந்தியா தேசிய லீக்கின் இனாயத்துல்லாஹ், ஐக்கிய சமாதான பேரவை பொது செயலாளர் முஜீபுர் ரஹ்மான் பாகவி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் அல்தாஃப், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத் தலைவர் கே.ஏ.மன்சூர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.⁠⁠⁠⁠

*👪தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே

சுவர்க்கத்தின் ஒரு  வாசலை நம் வீட்டிலேயே வைத்துக் கொண்டு சுவர்க்கத்திற்கு செல்லும் பாதையை நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.😢😔😢😔

இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், "எப்படி நான் அழாமல் இருக்க முடியும்?
சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!" என்றார்.

ஆம்!தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே!

நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.அவர்களைப் பேணுங்கள்.

அவர்களின் 'துஆ'வைப் பெறுங்கள்.எவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.

ஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும்,வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ
வேண்டும் என்று தான் 'துஆ' செய்வார்.
நாம் நன்றாக வாழ வேண்டும் என்று உள்ளார்ந்த முறையில் கவலை கொண்டு நம் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும்
பாடுபடும் ஒரே உறவு நம் பெற்றோர்தான்.

அந்த தளவுக்கு நம் நலனை நாடுபவர்கள் நிச்சயமாக உலகில் வேறு யாரும் இல்லை.

*உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள்.*
*அவர்கள்உங்களுக்கு அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி,* *அநீதி இழைத்தாலும் சரி"* *என மூன்று முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.*

தனது தாய் உயிருடன் இல்லையே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டதாக துணைவியர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றனர்."

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு."
(அல்குர் ஆன் 31:14)

யார் யாரையோ நினைத்து காலத்தை கடத்துபவர்களே!!!

உங்களைக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாயை சற்று சிந்தியுங்கள்...

*நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்காக அழுது துஆ செய்தவள் உங்களின் தாய்....*

*நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவர் உங்கள் தந்தை....*

பெற்றோரை ஹயாத்துடன் பெற்றிருக்கும் பிள்ளைகளே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

இறைவனின் திருப்தியைப் பெறுவதற்கு இன்னும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

*அவர்கள் மரணித்தபிறகு கைசேதப் படுவதைவிட அவர்கள் இருக்கும் போதே அவர்களுக்கான நன்றிக் கடன் செலுத்தத் தவறாதீர்கள்.

Tuesday, January 21, 2014

தி மெஸ்ஸேஜ் – தமிழில்


1977-ல் வெளிவந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவம் குறித்த திரைப்படம். நபிகளை, கலீபாக்களை கதாபாத்திரங்களாகக் காட்டாமல் தூதுத்துவத்தின் வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கின்றார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மை அழைத்து சென்றிருக்கின்றார்கள். நபித்தோழர்களின் ஈமானின் உறுதியே அதிசயிக்கும் வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.
THE MESSAGE

இறைவனின் அத்தாட்சிதான் இணையம்


உள்ளங்கையில் உலகம் அடங்கி விடுகிறது. எந்தவொரு தகவலும் நினைத்த நேரத்தில் உலகின் எந்த பகுதியையும் சென்றடைகிறது.
தேவையானவற்றை படிப்பதற்கும், ஒலி-ஒளி கோப்புகளைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்து சேமிப்பதற்கும் முடிகிறது என்று மனித அறிவின் வெளிப்பாடாய் வலைப்பின்னல் உலகம் தொடர்ந்து நிகழ்த்தும் பிரம்மாண்டங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கின்றன.
இன்றைய நிலையில் இணையதள தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை. இறைவனின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன். இறைவன் மனிதனுக்களித்த மதிநுட்பத்தை தொழில்நுட்பமாக யோசித்து படைத்த மிகச்சிறந்த படைப்புதான் கணிப்பொறி. அந்த தகவல் தொழில் நுட்பத்தின் பரிநாம வளர்ச்சிதான் வலைப்பின்னல்கள்.
சற்று ஆழமாக சிந்தித்தால் இவ்வலைப்பின்னல்களில் மறைந்திருக்கும் உண்மை விளங்கும்.
இணையங்களை ஒரே நேரத்தில் பல கோடி மக்கள் பார்க்க, படிக்க, ஒலி-ஒளி கோப்புகளைக் கேட்க, பார்க்க, பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு இணையதள தொழில்நுட்பம் மனிதனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இணையதளங்களில் செயல்பாடுகள் இணை துணை இல்லாத அல்லாஹ் ஒரே சமயத்தில் அனைத்து வஸ்துக்களையும் பார்க்கக் கூடியவனாகவும், கேட்கக் கூடியவனாகவும், பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான் என்கிற பேருண்மையை பரைசாற்றுகின்றன.
இணையங்கள்கூட ஓய்வெடுக்கும். சில வேளை ஸ்தம்பித்துப் போகும்.
ஆனால் அல்லாஹ் ஓய்வோ, உறக்கமோ இல்லாதவன். தேவையற்றவன். தனது அளப்பெரும் ஆற்றலால் அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆட்சி செய்பவன்.
அல்லாஹ் நமக்களித்த நவீன உலகின் நற்பாக்கியங்களை ஏகத்துவத்தின் அத்தாட்சிகளாக உணர்ந்து நன்றி செலுத்துவோம். அதன் மூலம் நமது அறிவையும்,ஆற்றலையும் அல்லாஹ் அதிகப்படுத்துவான்.

"ஃபேஸ்புக்…" தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக்.

அடிக்ஷன், டைம் வேஸ்ட், கிரிமினல்மயம் என்றெல்லாம் ஃபேஸ்புக் குறித்துப் புலம்பினாலும், கையை கழுவிட்டு சாப்பிடச் செல்வதைப் போல,பேஸ்புக்கை பாவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி.. பாவித்துக் கொள்ளட்டும். ஆனால் அப்படி பயன்படுத்துகையில் முக்கியமாக நான்கு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் ஆஸ்திரேலிய மீடியா சட்ட நிபுணர் ஜாமி வொயிட்.

முதல் விஷயம்: நண்பர்கள் எண்ணிக்கை சராசரியாக 120 இருக்கலாம். அதிகபட்சம் 5000. அதற்கு மேல் போனால் உங்கள் கணக்கு பொய்யா நிஜமா என ஆராய்ந்து, சந்தேகம் வந்தால் முடக்கவும் செய்யும் ஃபேஸ்புக் நிர்வாகம். எனவே நட்பை லிமிட்டாக வைத்திருங்கள்.

இரண்டாவது… ஒருவரின் பேஸ்புக் கணக்கு நிஜமாக இருக்க வேண்டும். பெயருக்கும், பாலினத்துக்கும் சம்பந்தமில்லாத படங்களை ப்ரொஃபைலில் போட்டு வைக்கக் கூடாது. பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரது பெயரில் கணக்கு தொடங்கி, அவரது ப்ரொபைல் படமாக ஒரு எருமை படத்தை வைத்திருந்தார்கள். இதுபோன்றவற்றை அறவே தவிர்க்கச் சொல்கிறது ஃபேஸ்புக்.

இந்த அரசு ஆணையை யாரும் பின்பற்றவில்லை


மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!


சார் கொஞ்சம் சென்னைக்கு வாங்களேன் இங்க சுத்தம் செய்ய வேண்டிய குப்பை அதிகம் உள்ளது.

நல்லதை பாராட்டுவோம்......மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் மதுரை எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீபகாலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்மப்டியில் பயணிக்கச் செய்தார். சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ-வீலரில் பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ். பி. யே ஹெல்மெட்அணிந்து கொண்டு பைக்கில் சென்றார். மூன்றுமுறை நடந்த இந்தச் சோதனைகளில் , போலீஸார்லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர். 'இந்தச்சோதனை தொடரும்' என்று எஸ். பி. அறிவித்திருப்பதால் ,நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். என்னிடம் மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர், "தினமும் 2 ஆயிரம்ரூபாயாவது இல்லாமல் ரோந்துப் பணியை முடிக்கமாட்டோம் ஸார்....இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள் எஸ்.பி. இருப்பாரோ , டூ-வீலர் , லோடு ஆட்டோக்களில் எஸ். பி.வருவாரோ என்று படபடப்பாக இருக்கிறது. கேரளாவிற்கு மாடுகளைக் கால்நடையாக ஓட்டிக்கொண்டு போகிறவர்களிடம் கூட ஐம்பது , நூறு என்று வாங்குவோம். இப்போது மாடு ஓட்டுகின்ற வேடத்தில் கூட எஸ். பி. யோ, அவர் அனுப்பியபோலீஸோ வருகின்றார்களோ என்று பயமாகஇருக்கிறது" என்று சலித்துக் கொண்டார். முன்பெல்லாம் இந்த ரோந்துப் பணிக்கு போலீஸார் விரும்பி வருவார்கள். சட்ட-ஒழுங்கு டென்ஷன் இல்லை: கோர்ட்அலைச்சலில்லை சரியான ஷிப்ட் டூட்டி. போதாதக்குறைக்கு நல்ல வரும்படி என்பதால் பலரும் இந்தப் பணியைப் பெற முண்டியடிப்பார்கள்.இப்போது எஸ்.பி. பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் ,'இங்கிருந்து கழண்டு கொ போதும்' என்ற மனநிலையிலேயே பல போலீஸார் இருப்பதாகக் கேள்வி

Thanks:- Mohamed Yusuf Yusuf Dhaha

தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்!பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!

மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

"நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!

அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!

மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!

''எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.'' (அல்குர்ஆன் 24:52)

குறிப்பு

மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள்.

உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம்.

ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி!

மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் துளசி


இந்தியாவில் மருத்துவ குணங்களை கொண்ட செடிகளில் ஒன்றாக துளசி இருந்து வருகிறது. பல வீடுகளில் இன்றும் துளசியை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக உதவி பேராசிரியர் சந்திகாந்த் மாணி கூறியதாவது:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவினோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது. எங்களின் இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளோம். கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பழவகைகள்


மாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

கொய்யா:வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.
பப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்.

மாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப்படுத்தும்.

வாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்.

ஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.

திராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

எலுமிச்சை: எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது.

பேரீட்சை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்.

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு


மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு.

சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.

ஆட்டின் தலை:

இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்.

ஆட்டின் கண்:

கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.

ஆட்டின் மார்பு:

கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.

ஆட்டின் இதயம்:

தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்.

ஆட்டின் நாக்கு:
சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.

ஆட்டின் மூளை:

கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

ஆட்டின் நுரையீரல்:

உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.

ஆட்டுக் கொழுப்பு:

இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.

ஆட்டின் குண்டிக்காய்:

இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.

ஆட்டுக்கால்கள்:

எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.
Thanks: http://indru.todayindia.info/meat/

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

அன்புள்ள மோடி! இப்படிக்கு, ஒரு மனசாட்சியுள்ள மனிதன் க.கனகராஜ் (CPI-M)

அன்புள்ள என்பது சம்பிரதாயம் அல்ல. நாகரிகம் அடைந்த மனிதனால் இன்னொரு மனிதனை வெறுக்க முடியாது. ஒருவருடைய கருத்துக்கள் தவறானவை எனில், அவற்றை வெறுக்கலாம். மனிதனை அல்ல!

தங்களது வலைப்பூவில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் யாரையும் உலுக்கிவிடும். நானும் விதிவிலக்கல்ல. அனைவரையும் சகோதர, சகோதரிகளே என்று அழைத்திருக்கிறீர்கள். சகோதர, சகோதரிகளின் உரிமைகளில் ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் அப்படித்தான் தாங்கள் கருதுகிறீர்களா? ''இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாதோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள்... அனைவரும் இந்துக்களாக மாற வேண்டும் அல்லது, இரண்டாந்தர குடிமக்களாக அடங்கியிருக்க வேண்டும்'' என்கிற உங்கள் தாய் ஸ்தாபனத்தின் கருத்துக்களை மறுதலிக்கிறீர்களா? அப்படி வெளிப்படையாக நீங்கள் பேசாத பட்சத்தில், இந்த வார்த்தைகள் உணர்வல்ல; வெறும் வார்த்தைகள் மட்டுமே. இவை கபடத்தனமானவை; பெரும் துயரத்துக்கான அழைப்பு என்பதைத் தவிர வேறில்லை.

இரண்டாவதாக மிக மோசமாக பூகம்பத்தின் பாதிப்பையும் முஸ்லிம் மக்கள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையையும் நளினமாகவும் லாகவமாகவும் இணைத்திருக்கிறீர்கள். அதன் மூலம் இரண்டும் இயற்கையானவை; தடுத்திருக்க முடியாதவை என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்.

இரண்டும் ஒன்றுதானா? பேரழிவின் உக்கிரம், உயிரிழப்பு, பொருட்சேதம் இவையெல்லாம் ஒப்பிடத்தக்கவையே. ஆனால், காரணம் ஒப்பிடத்தக்கதா? பி.ஜே.பி-யின் அதிகாரப்பூர்வ ஊடகத் தொடர்பாளராக இருந்த வி.கே.மல்கோத்ரா, 'குஜராத் படுகொலைகளுக்காக நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றால், பூகம்ப அழிவுகளுக்காக கேசுபாய் பட்டேல் பதவி விலகியிருக்க வேண்டுமா?’ என்று கேட்டார். அதே மனநிலையில்தான் தாங்களும் இன்று இருக்கிறீர்கள் என்பதை உங்களால் மறைக்க முடியவில்லை.

மூன்றாவதாக, 'நான் அடியோடு கலங்கிப்போனேன். துக்கம், வருத்தம், துயரம், வலி, மனவேதனை, துயரம் இந்த வார்த்தைகள் எதுவும் அந்த மனிதாபிமானம் அற்ற செய்கையை உணர்ந்தவர்களின் துயரத்தை பிரதிபலிக்க சக்தி அற்றவை’ என்று உங்கள் கடிதம் கூறுகிறது.


அது உண்மையானால் மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் உண்மையாகப் பேசியிருக்கிறீர்களா...? ''குஜராத்தின் ஒட்டுமொத்த மக்களும் ஆத்திரப்பட்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டால் (வன்முறைகள்) இன்னும் மோசமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது'' என்று பேசியிருக்கிறீர்கள். இன்னும் மோசம் என்றால் எதை எதிர்பார்த்தீர்கள்? குஜராத்தின் எந்த மூலையிலும் யாதொரு முஸ்லிமும் இல்லாத அளவுக்கான அழித்தொழித்தலையா? ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும், இது எங்கள் கணிப்பென்று. ஆனால், 2002 மார்ச் 3-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறினீர்களே... அந்த அவக்கேடான வார்த்தைகள் உண்மையான மோடியை உலகுக்குக் காட்டியது.
'இத்தனை காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, உங்கள் அறிவியல் அறிவை வெளிப்படுத்தி விளக்கினீர்கள். நியூட்டனின் மூன்றாவது விதியைக் கூறினீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் நடக்கும் என்று கூறினீர்கள். இதுதான் தாங்கள் துயரத்தை வெளிப்படுத்திய முறை. தாங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த கதையை, இந்த ஒற்றை வாக்கியம் பளிச்சென்று சொல்கிறது.

பல பேரைக் கொன்றவர்கள், குழந்தைகளைக் கொன்றவர்கள், காமக்கொடூரர்கள் இவர்களையெல்லாம் விசாரித்து தூக்கில் போடும்போதுகூட, தூக்கிலிடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்கூட, ஒரு உயிர்போவதைக் கண்டு, மரணத்தின் வலி கண்டு உடைந்து நொறுங்கியிருக்கிறார்கள். அப்பாவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை ஆயுதத்தால் குத்தி கூட்டமாய் நின்று நெருப்பில் பொசுக்கியதை, நியூட்டனைத் துணைக்கு அழைத்து நியாயப்படுத்துவதுதான் நீங்கள் துயரம் அடைந்ததை வெளிப்படுத்தும் முறையா... அல்லது, நாகரிகம் வளர்கிறபோது காண்டுமிராண்டித்தனமும் கூடவே வளரும் என்று சொல்லும் முறையா?

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இஷான் ஜாஃப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் 19 பேரும், அந்த அடுக்குமாடியில் இருந்த 68 பேரும் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அது குறித்து பத்திரிகைகள் கேட்டபோது அவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதால்தான் கொளுத்தப்பட்டார் என்று கூறினீர்கள். ஏன் சுட்டார் என்ற கேள்விக்கு, அது அவருடைய இயல்பான குணமாக இருக்கலாம் என்றீர்கள். பின்னர் பத்திரிகைகள் எழுதின... 'இஷான் ஜாஃப்ரி சிறந்த நூலகம் ஒன்றை வைத்திருந்தார். அந்த நூலகத்தில் சிட்டுக்குருவி கூடுகட்டி அடைகாத்திருந்தது. ஃபேன் சுற்றினால் பறக்கும் குருவிக்கு காயம் ஏற்படும் என்பதால், ஃபேன் சுவிட்சையே ஆன்செய்ய முடியாமல் ஒட்டி வைத்திருந்தார் என்று.

ஒரு வாதத்திற்காக அவர் சுட்டார் என்று வைத்துக்கொண்டால்கூட, அந்தக் குடும்பத்தில் இதர 19 பேர் (குழந்தைகளும் அடக்கம்) என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் நீங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் வருத்தத்தை அனுபவித்த முறையா?

இதேபோன்று பந்வாரா கிராமத்தில் 38 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டதை ஷினீணீறீறீ ஞிவீstuக்ஷீதீணீஸீநீமீ என்று குறிப்பிட்டதுதான் உங்கள் சொல்ல முடியாத துயரமா?

நான்காவதாக, சிறுபான்மை மக்களின் மீது ஒரு அழித்தொழித்தல் நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது என்றாவது, 'அதை நிறுத்துங்கள்’ என்று நீங்கள் பேசியது உண்டா? அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய் கூட 'இந்த தேசத்தின் நெற்றியில் கரும்புள்ளி’. 'இந்தப் படுகொலையில் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டது உலகின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளது’ என்று குறிப்பிட்டார். தாங்கள் எப்போதாவது அப்படி பேசியது உண்டா? வன்முறை என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தியது இல்லையே? ''இயற்கையான கோபத்தின் வெளிப்பாடு'' என்றல்லவா கூறினீர்கள்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டில்கூட ஓரவஞ்சனை காட்டினீர்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், வன்முறையில் எரித்தும் வெட்டியும் உயிரோடு புதைத்தும் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும் என்று அறிவித்தீர்கள். கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அனைவருக்கும் ரூ.1 லட்சம் என்று அறிவித்தீர்கள். ரூ.2 லட்சம் என்றால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குறைத்தீர்கள்.

உங்கள் கரிசனத்தில்கூட சரிசமம் இல்லை என்பதை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். இதுதான் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியின் வெளிப்பாடா? காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உங்கள் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உங்கள் காவல் துறைத் தலைவர் சமூக உணர்வு காவல் துறையிலும் பிரதிபலிக்கும் என்று நியாயப்படுத்தினார். போலீஸ் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல; பல இடங்களில் காட்டுமிராண்டித்தனமான கும்பலுக்குத் துணைபோனதை ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

போலீஸ் வண்டியைப் பார்த்து கலவரக்காரர்கள் தயங்கியபோது போலீஸ் அவர்களை ஊக்கப்படுத்தி கைக்காட்டியதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் பங்கு வாங்கிச் சென்றதும்கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்தது உண்டா? மோடி அவர்களே... துக்கம் தொண்டையடைக்க இன்று வரை செய்வதறியாது நிற்கிறீர்களோ?

உங்கள் காவல் துறை கலவரத் துறையாகிவிட்டது. ராணுவம் வந்தது. ஆனால், அதை நீங்கள் பயன்படுத்தாமல் காலம் தாழ்த்தினீர்கள். ஏனென்று கேட்டால், 'ராணுவத்துடன் ஒரு மேஜிஸ்திரேட் செல்ல வேண்டும். மேஜிஸ்திரேட் கிடைக்கவில்லை’ என்றீர்கள். இதுவெல்லாம் உங்கள் மனவேதனையின் வெளிப்பாடுதான் என்கிறீர்களா?

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இந்த 10 காலத்தில் இந்த குற்றங்களுக்காக உங்கள் அரசாங்கம் தானே முன்வந்து யாரையேனும் தண்டித்திருக்கிறதா? இல்லையே!

மாறாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானி - அவர் மகப்பேறு மருத்துவரும்கூட - கொலைகாரர்களைத் தூண்டிக்கொண்டிருந்தார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரித்தீர்கள். கொலை செய்தால் அமைச்சர்! என்னே உங்கள் காருண்யம்!

இந்தக் கொலைகள் நடந்து ஒரு வாரம் ஆன பின்பும் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் யாரையும் உங்கள் அரசு கைது செய்யவில்லையே என்று கேட்டபோது, யார் மீதும் புகார் வரவில்லை என்றீர்கள். அந்தக் காலத்தில் 72 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கிவிட்டதாக மார்தட்டினீர்கள். ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும். கலவரம் என்றால் இரு தரப்பும் மோதுவது; அரசும் போலீஸும் காட்டுமிராண்டிக் கும்பலுடன் சேர்ந்துவிட்டது. வெட்டப்படுவோரும் எரிக்கப்படுவோரும் எப்படி எதிர்த்து நிற்பார்கள். உண்மையில் இப்படியரு விபரீதத்தை உலகம் கண்டிருக்காதுதான்.

மோடி அவர்களே... இப்போதும்கூட மேற்கண்ட கடிதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குறித்து நீங்கள் பேசவில்லை; பேசமாட்டீர்கள்; 2002 செப்டம்பர் மாதத்தில் நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். நாம் ஐவர்; நமக்கு இருபத்தைவர் என்று நொந்து கிடந்த மக்களைக் கேலி செய்தீர்கள். நிவாரண முகாம்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டியபோது, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று ஏகடியம் பேசினீர்கள். கருணை மழையே, மோடி ராசா! உங்கள் கடிதம் உண்மையும் அல்ல, உண்மை உணர்வும் அல்ல.

அந்தக் கடிதத்தில் உங்கள் நேர்மை வெளிப்படவில்லை. நீங்கள் நியமித்துள்ள 'ஆப்கோ வேர்ல்ட் வைடு’ நிறுவனத்தின் திறமையும், சாகசமும் வெளிப்படுகிறது. ஒப்பனைக்காரர்களின் திறமையால் யாரும் அழகாகிவிட்டதாக சொன்னால், அது உண்மையெனில், நீங்கள் கருணா முர்த்திதான்.

ஆனால் ஒன்று மோடி அவர்களே... உங்களது துக்கமே இந்த நாட்டு மக்களுக்கு இத்தனை பேரழிவைக் கொண்டுவருமென்றால் உங்களது சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறாதிருக்க நாகரிக சமூகத்தின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஒரு மனசாட்சியுள்ள மனிதன்

க.கனகராஜ் (CPI-M)

ஜூனியர் விகடன் / 15 Jan, 2014

Friday, January 17, 2014

"ஃபேஸ்புக்…" தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!

இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக்.

அடிக்ஷன், டைம் வேஸ்ட், கிரிமினல்மயம் என்றெல்லாம் 


ஃபேஸ்புக் குறித்துப் புலம்பினாலும், கையை கழுவிட்டு சாப்பிடச்

 செல்வதைப் போல,பேஸ்புக்கை பாவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி.. பாவித்துக் கொள்ளட்டும். ஆனால் அப்படி 


பயன்படுத்துகையில் முக்கியமாக நான்கு விஷயங்களைக் 

கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் ஆஸ்திரேலிய 


மீடியா சட்ட நிபுணர் ஜாமி வொயிட்.

முதல் விஷயம்: நண்பர்கள் எண்ணிக்கை சராசரியாக 120 


இருக்கலாம். அதிகபட்சம் 5000. அதற்கு மேல் போனால் உங்கள் 

கணக்கு பொய்யா நிஜமா என ஆராய்ந்து, சந்தேகம் வந்தால் 

முடக்கவும் செய்யும் ஃபேஸ்புக் நிர்வாகம். எனவே நட்பை 

லிமிட்டாக வைத்திருங்கள்.

இரண்டாவது… ஒருவரின் பேஸ்புக் கணக்கு நிஜமாக இருக்க 


வேண்டும். பெயருக்கும், பாலினத்துக்கும் சம்பந்தமில்லாத 

படங்களை ப்ரொஃபைலில் போட்டு வைக்கக் கூடாது. பிரிட்டிஷ் 

பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரது பெயரில் கணக்கு 

தொடங்கி, 

அவரது ப்ரொபைல் படமாக ஒரு எருமை படத்தை 

வைத்திருந்தார்கள். இதுபோன்றவற்றை அறவே தவிர்க்கச் 

சொல்கிறது ஃபேஸ்புக்.

"ஐ-சேப்" எனும் ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை கண்டுபிடிக்க முயற்சி செய்துவரும் சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்ற 13 வயது சிறுவன்
சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்ற 13 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தினமும் இணையதளத்தில் 3 மணி நேரம் செலவிடுவது வழக்கம். அவனது பெற்றோர், பொழுதுபோக்கு அம்சங்களான விளையாட்டில் அவன் கவனம் செலுத்தாமல் மின்னணு தொழில்நுட்பங்கள ை பயன்படுத்தி சிறந்த பயன்பாடுகளை உருவாக்க முயன்றதால் அவனுக்கு பெரும் ஊக்கம் கொடுத்தனர். வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் இம்மாணவன் கூறுகையில், பயன்பாடுகளை உருவாக்குவதிலும், புதிய செயல்முறை திட்டங்களை வடிவமைப்பதிலும் தான் கவனம் செலுத்தி வந்ததாக கூறினார். அவனது இந்த ஆர்வமே தற்போழுது அவனின் கண்டுபிடிப்பான "பேருந்து இருப்பிடம் அறியும்" பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழிற்கல்வி நிறுவனம் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான முதல் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்கான பரிசாக "கூகுள் நெக்சஸ் டேப்ளட்டும்" 2013 ஆம் ஆண்டிற்கான பரிசாக நெக்சஸ் 5 ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சான்றிதழும் அந்நிறுவனத்தின் சார்பில் அச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது. தனது இரண்டரை வயதிலேயே கணிணி இயக்குவதில் அச்சிறுவன் ஆர்வம் கொண்டிருந்ததாக அவனது தந்தை சந்தோஷ் குமார் தெரிவித்தார். அவனாகவே மென்பொருள் பற்றிய விவரங்களை "யூ டியூப்" இணையதளம் மூலம் அறிந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது அவன் "ஐ-சேப்" எனும் ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை ஒரே பொத்தானை அழுத்தி தெரிவிக்கும் வகையில்(குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக) புதிய பயன்பாட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இச்சிறுவனுக்கு நமது வாழ்த்துக்களை பகிர்வோம

இவரை நினைவிருக்கிறதா?

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16. உமர் முஃக்தார் (1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.


உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார். 1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
இத்தாலி- துருக்கி யுத்தம்

1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லியின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி கூறினான். லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது. இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.


உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உமர் முஃக்தார் அவர்களின் தியாக வரலாறு அற்புதமானவை. இன்று நமது இந்திய தேசத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் அந்நிய சக்திகளிடம் அடகுவைக்கும் நிலை இருந்து வருகிறது. உமர் முஃதார் அவர்களைப் போன்று இந்தியாவிலும் உலமாக்கள் மன உறுதியுடன் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு முன்வர வேண்டும்

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

முயற்சித்துப் பாருங்களேன்.

பேஸ்புக் தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆச்சரியப்படும் உண்மைகள்

இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.

ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது.
அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மை அடிமைப்படுத்தி நமது முக்கிய தகவல்களை கொண்டுள்ளது எனலாம், அந்த பேஸ்புக் குறித்தும் நீங்கள் வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் உள்ளன.
இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
* இந்த உலகில் உள்ள 10ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது.
* இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது.
* ஒரு நிமிடத்தில் இதில் 10 லட்சம் லிங்குகள் ஷேர் செய்யப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 3 மில்லியன் ஸ்டேட்டஸ் ஆப்டேப் இதில் பதியப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 8 லட்சம் பேஜ் இன்வைட்ஸ் அனுப்பப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் போட்டோக்கள் TAG செய்யப்படுகின்றன.
* ஒரு நிமிடத்தில் 30 இலட்சம் பிரெண்ட் ரெக்வஸ்ட்கள் அனுப்பப்படுகின்றது.
* 9 கோடி போட்டோக்கள் கிறிஸ்மஸ் விடுமுறையில் மட்டும் பதியப்படுகின்றன.
* 80 சதவிகித இந்திய இளைஞர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.
* மேலும் 30 சதவிகிதம் பேர் பேஸ்புக்கில் இருப்பவர்களில் 35 வயதிற்கு மேல் இருப்பவர்கள்.
* 70 சதவிகித பேஸ்புக் யூஸர்ஸ் தினமும் லாக் இன் செய்கிறார்கள்.
* இதில் உள்ள மொத்த யூஸர்ஸின் சதவிகிதப்படி ஒவ்வொரு யூஸர்ஸூம் 220 பிரெண்ட்ஸ் வைத்துள்ளனர்.
* ஒரு மாதத்தில் சுமார் 900 பில்லியன் நிமிடங்கள் இதில் உள்ள மக்களால் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது.
* 50 பில்லியன் அளவுக்கு இதில் தினந்தோறும் போட்டக்கள் மற்றும் ஸ்டேட்டஸ் போடப்படுகின்றது.
* ஒரு யூஸர் ஒரு மாதத்தில் 90 ஸ்டேட்டஸ் அல்லது போட்டோக்களை ஷேர் செய்கிறார்.
* இதுவரை அதில் 70 வகையான மொழிகள் பேஸ்புக்கில் உள்ளது.
* ஒட்டுமொத்த பேஸ்புக் பயன்பாட்டில் 22 சதவிகிதம் அமெரிக்கர்கள் தான்.
* தினந்தோறும் 5 இலட்சம் யூஸர்கள் இதிலிருக்கும் TRANSLATION ஆப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர்.
* தினந்தோறும் இதில் 3 கோடி புதிய அப்ளிகேஷன்கள் ஏற்றப்படுகின்றது.
* இதை தினசரி மொபைல் மூலம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 மில்லியன் ஆகும்.
* ஒவ்வொரு மாதமும், 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளி வலைத்தளங்களில் பேஸ்புக்கை லிங்க் செய்கின்றனர்.
* social plugins ஏப்ரல் 2010 இல் தொடங்கப்பட்டது முதல் 10,000 புதிய வலைத்தளங்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பேஸ்புக் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
* மேலும் 2.5 மில்லியன் வலைத்தளங்கள் காம்ஸ்கோர் இன் அமெரிக்க டாப் 100 வலைத்தளங்களில் மற்றும் காம்ஸ்கோர் உலகளாவிய முதல் 100 வலைத்தளங்களில் பாதிக்கும் மேற்பட்டது பேஸ்புக்கிற்கு உட்பட்டது.
* இதுவரை உலகில் 200 மொபைல் ஆப்ரேட்டர்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக்குடன் கூட்டு வைத்துள்ளது.
* அல் பசினோவின் முகம் தான் அசல் பேஸ்புக் முகப்பாக இருந்தது.
* பேஸ்புக்கில உள்ள POKE என்ற வார்த்தைக்கு இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
* உலகிலேயே அதிகம் பேஸ்புக் பயன்படுத்துவோர் அவுஸ்திரேலிய மக்கள் தான்.
* ஒரு பேஸ்புக் ஊழியர் வேலை விட்டு வெளியே வந்தால் அவருக்கு eBay 2 இலட்சம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை தர தயாராக இருக்கின்றது.