Tuesday, January 21, 2014

தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்!



பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப் பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன் பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!

மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

"நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!

அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!

மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!

''எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.'' (அல்குர்ஆன் 24:52)

குறிப்பு

மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள்.

உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம்.

ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி!

No comments:

Post a Comment