சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்ற 13 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தினமும் இணையதளத்தில் 3 மணி நேரம் செலவிடுவது வழக்கம். அவனது பெற்றோர், பொழுதுபோக்கு அம்சங்களான விளையாட்டில் அவன் கவனம் செலுத்தாமல் மின்னணு தொழில்நுட்பங்கள ை பயன்படுத்தி சிறந்த பயன்பாடுகளை உருவாக்க முயன்றதால் அவனுக்கு பெரும் ஊக்கம் கொடுத்தனர். வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் இம்மாணவன் கூறுகையில், பயன்பாடுகளை உருவாக்குவதிலும், புதிய செயல்முறை திட்டங்களை வடிவமைப்பதிலும் தான் கவனம் செலுத்தி வந்ததாக கூறினார். அவனது இந்த ஆர்வமே தற்போழுது அவனின் கண்டுபிடிப்பான "பேருந்து இருப்பிடம் அறியும்" பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழிற்கல்வி நிறுவனம் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான முதல் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்கான பரிசாக "கூகுள் நெக்சஸ் டேப்ளட்டும்" 2013 ஆம் ஆண்டிற்கான பரிசாக நெக்சஸ் 5 ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சான்றிதழும் அந்நிறுவனத்தின் சார்பில் அச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது. தனது இரண்டரை வயதிலேயே கணிணி இயக்குவதில் அச்சிறுவன் ஆர்வம் கொண்டிருந்ததாக அவனது தந்தை சந்தோஷ் குமார் தெரிவித்தார். அவனாகவே மென்பொருள் பற்றிய விவரங்களை "யூ டியூப்" இணையதளம் மூலம் அறிந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது அவன் "ஐ-சேப்" எனும் ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை ஒரே பொத்தானை அழுத்தி தெரிவிக்கும் வகையில்(குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக) புதிய பயன்பாட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இச்சிறுவனுக்கு நமது வாழ்த்துக்களை பகிர்வோம
No comments:
Post a Comment