உள்ளங்கையில் உலகம் அடங்கி விடுகிறது. எந்தவொரு தகவலும் நினைத்த நேரத்தில் உலகின் எந்த பகுதியையும் சென்றடைகிறது.
தேவையானவற்றை படிப்பதற்கும், ஒலி-ஒளி கோப்புகளைக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்து சேமிப்பதற்கும் முடிகிறது என்று மனித அறிவின் வெளிப்பாடாய் வலைப்பின்னல் உலகம் தொடர்ந்து நிகழ்த்தும் பிரம்மாண்டங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கின்றன.
இன்றைய நிலையில் இணையதள தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை. இறைவனின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன். இறைவன் மனிதனுக்களித்த மதிநுட்பத்தை தொழில்நுட்பமாக யோசித்து படைத்த மிகச்சிறந்த படைப்புதான் கணிப்பொறி. அந்த தகவல் தொழில் நுட்பத்தின் பரிநாம வளர்ச்சிதான் வலைப்பின்னல்கள்.
சற்று ஆழமாக சிந்தித்தால் இவ்வலைப்பின்னல்களில் மறைந்திருக்கும் உண்மை விளங்கும்.
இணையங்களை ஒரே நேரத்தில் பல கோடி மக்கள் பார்க்க, படிக்க, ஒலி-ஒளி கோப்புகளைக் கேட்க, பார்க்க, பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு இணையதள தொழில்நுட்பம் மனிதனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இணையதளங்களில் செயல்பாடுகள் இணை துணை இல்லாத அல்லாஹ் ஒரே சமயத்தில் அனைத்து வஸ்துக்களையும் பார்க்கக் கூடியவனாகவும், கேட்கக் கூடியவனாகவும், பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான் என்கிற பேருண்மையை பரைசாற்றுகின்றன.
இணையங்கள்கூட ஓய்வெடுக்கும். சில வேளை ஸ்தம்பித்துப் போகும்.
ஆனால் அல்லாஹ் ஓய்வோ, உறக்கமோ இல்லாதவன். தேவையற்றவன். தனது அளப்பெரும் ஆற்றலால் அனைத்து வஸ்துக்களின் மீதும் ஆட்சி செய்பவன்.
அல்லாஹ் நமக்களித்த நவீன உலகின் நற்பாக்கியங்களை ஏகத்துவத்தின் அத்தாட்சிகளாக உணர்ந்து நன்றி செலுத்துவோம். அதன் மூலம் நமது அறிவையும்,ஆற்றலையும் அல்லாஹ் அதிகப்படுத்துவான்.
No comments:
Post a Comment