Friday, July 15, 2011

விலை ஏற்றம்

மது அருந்துவோர் இருக்கும்வரை
மதுவின் விலை ஏற்றம்தான் காணும்

புகை பிடிப்போர் இருக்கும்வரை

அந்தபுகையின் ஏற்றம்தான் காணும்

இரு சக்கர வாகனம் அதிகரிக்கும் போது

பெட்ரோல் விலை ஏற்றம்தான் காணும்

அடுத்த நிறுத்தத்திற்கு பஸ் பயணம்

செய்யும் வரை, கட்டணம் ஏற்றம்தான்காணும்

தங்கத்தை சேமிப்பவர் இருக்கும் வரை

தங்கத்தின் விலை ஏற்றம்தான் காணும்

நவீன ஆடையில் ஆசை இருக்கும் வரை

ஆடைகளின் விலை ஏற்றம்தான் காணும்

செல்போனுக்கு அடிமையாக இருக்கும் வரை

அதன் விலை ஏற்றம்தான் காணும்

டிவி நாடக மோகம் இருக்கும் வரை

அதன் எபிசோட் அதிகரிக்கத்தான் செய்யும்

லஞ்சம் கொடுப்போர் இருக்கும் வரை

லஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும்

இவை எல்லாம் ஏற்றம் காணும் போது

"நம் அன்றாட உணவுப் பொருட்களின்"
விலைஏற்றம்தான் காணும்

"இவை எல்லாம் சரி செய்ய"


நண்பர்களே !


மது பழக்கத்தை நிறுத்துங்கள்

புகை பழக்கத்தை நிறுத்துங்கள்
சைக்கிளில் பத்து கிலோமீட்டர் வரை செல்லுங்கள்
அடுத்த நிறுத்தத்திற்கு நடந்து செல்லுங்கள்
தங்கம் சேமிப்பதை நிறுத்துங்கள்
நவீன ஆடையை ஆசையை குறையுங்கள்
பொது தொலை பேசியை உபயோகிங்கள்
டிவி சீரியல் பார்ப்பதை குறையுங்கள்
லஞ்சம் கொடுப்பதை நிறுத்துங்கள்

"இல்லை என்றால்"

இதை எல்லாம் சரி செய்ய
ஒரு "ஒரு நாள் முதல்வரை"

"உருவாக்குங்கள்" 

நன்றி:எழுதியவர் :சேதுராமலிங்கம்.உ

No comments:

Post a Comment