Tuesday, October 30, 2012

கால்பந்து விளையாட்டில் 300 கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை!!!

ஸ்பெய்ன்:சர்வதேச கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 300வது கோலை அடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவரான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காவும் விளையாடி வருகிறார்.
தற்போது ஸ்பெயினின் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து கிளப் அணிகளுக்கான போட்டியில் பார்சிலோனா அணி இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ராயோ வாலேகானோவுடன், பார்சிலோனா அணி மோதியது. இதில் மெஸ்சி தன்னுடைய 300வது மற்றும் 301வது கோல்களை போட்டார்.
ஏற்கனவே பார்சிலோனா அணி 3 கோல்கள் போட்டிருந்தது. இதனால் அந்த அணி 5-0 என்ற கோல் கணக்கில் ராயோ வாலெகானோவை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
மெஸ்சி அடித்துள்ள 301 கோல்களில், 270 கோல்கள் பார்சிலோனா அணிக்காகவும், 31 கோல்களை அர்ஜென்டினாவுக்காக போட்டுள்ளார்.
இதை வெறும் 419 ஆட்டங்களிலேயே அவர் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. unkal seythiyil thavaru netru avar86 kolkalai adithu oru aandil athika kolakla aditha sathanai than seythi kavanikkavum

    ReplyDelete