Monday, February 7, 2011

அதிகரித்து வரும் மார்பகப் புற்று நோய்

இங்கிலாந்தில் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகப் புற்று நோய் தினமான இன்று இங்கிலாந்திலுள்ள புற்று நோய் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நாட்டில் மார்பக புற்று நோய்க்கு இலக்காகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணமென்று அந்த ஆய்வு கூறுகிறது. அளவுக்கதிகமான மது மற்றும் உணவு அருந்துதல், சரியான உடற்பயிற்சியின்மை, காலம் கடந்து கர்ப்பம் தரித்தல் போன்றவை காரணங்களாக தெரிய வந்துள்ளன.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டில் 42,400 ஆக இருந்த நிலை 2008 ஆம் ஆண்டில் 3.5 % அதிகரித்து 44,700 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. "50 லிருந்து 69 வயதுடைய பெண்களே இந்த நோய்க்கு அதிகம் இலக்காகிறார்கள்.  இருப்பினும், வளர்ந்து வரும் மருத்துவ வசதியினால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இந்த நோயை பெரும்பாலும் கட்டுப்படுத்த இயலும்" என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 5,50,000 என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment